பல குடும்பங்களில் குல தெய்வம் கண்டு பிடிப்பது எப்படி என்ற சந்தேகமும் தேடலும் இருக்கிறது. ஐந்து வருடம் பத்துவருடம் கூட குலதெய்வத்தை தேடி அலைபவர்கள் இருக்கிறார்கள்.
வாழ்க்கையில் தொடர்ந்து பிரச்சனைகளையும் தோல்விகளையும் சந்திப்பவர்கள் பலரும் ஜோதிடர்களிடம் பலன் கேட்க்கும் போது பல இடங்களில் பிரச்சனைக்கு காரணம் குல தெய்வ தோஷம் அல்லது குல தெய்வ சாபம் என்று சொல்வதுண்டு. இதனால் குலதெய்வத்தை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் பலருக்கும் ஏற்படுகிறது.
பொதுவாக குல தெய்வம் கண்டுபிடித்து சொல்பவர்கள் மறை குறிப்பாகவே குலதெய்வத்தை பற்றி சொல்வதுண்டு. உங்கள் பூர்வீக இடத்திற்கு வடக்கே இருக்கிறது.....ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது.....பெண் தெய்வம்.....கையில் கத்தியுடன் இருக்கிறது என்று பொதுவாக சொல்வதுண்டு.
ஆனால்.......
பிரசன்ன ஜோதிடத்தின் வம்சகள பிரசன்னம் என்ற முறையில் குல தெய்வத்தை கண்டுபிடிக்கும் போது குல தெய்வத்தின் பெயர்...இருப்பிடத்தின் பெயர்.....ஆலயம் அமைந்திருக்கும் ஊரின் பெயர் ஆகியவற்றை அட்சர சுத்தமாக சொல்ல முடியும்.
கடந்த பதினைந்து வருடமாக இப்படித்தான் நான் குலதெய்வம் கண்டு பிடித்து சொல்லி வருகிறேன்.........
பல இடங்களில் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் இருக்கும் கிரகங்களைக்கொண்டு குலதெய்வத்தை சொல்வதுண்டு.
உதாரணமாக ஐந்தாம் இடத்தில் சூரியன் இருந்தால் சிவன் தொடர்பான தெய்வம் என்றும் சந்திரன் இருந்தால் அம்மன் என்றும் செவ்வாய் இருந்தால் முருகன் என்றும் புதன் இருந்தால் மகாவிஷ்ணு என்றும் குரு இருந்தால் சித்தர்கள் என்றும் சுக்கிரன் இருந்தால் மகாலக்ஷ்மி என்றும் சனி இருந்தால் எல்லை தெய்வங்கள் என்றும் ராகு இருந்தால் ரத்த பலி கேட்க்கும் தெய்வங்கள் என்றும் கேது இருந்தால் கோவில் இல்லாத தியாகம் செய்த முன்னோர்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு.
இது நடைமுறை சாத்தியம் இல்லாதது. காரணம் ஒரு குடும்பத்தில் ஐந்து ஆண்கள் இருந்தால் எல்லோருக்கும் ஒரே குலதெய்வம் தான் இருக்கும். அந்த பங்காளி ஆண்கள் அனைவருக்கும் ஒரு குறிபிட்ட கிரகம் ஐந்தாம் இடத்தில் இருக்க சாத்தியமில்லை.
அதாவது ஒருவருக்கு ஐந்தாம் இடத்தில் ராகு இருந்து ரத்த பலி கேட்க்கும் கிரகம் குலதெய்வம் என்று சொன்னால் அந்த குலதெய்வம் அந்த குலத்தில் இருக்கும் அனைத்து ஆண்களுக்கும் குல தெய்வமாகும். அப்படி இருந்தால் அந்த குலத்தில் இருக்கும் அனைத்து ஆண்களுக்கும் ஐந்தாம் இடத்தில் ராகு இருக்க வேண்டுமே.....
காலம்காலமாக குலதெய்வ வழிபாட்டை தவறாமல் கடை பிடிப்பவர்களிடம் அவர்களின் குலதெய்வம் அவர்கள் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் இருக்கும் கிரகத்தோடு தொடர்புடையதாக இருக்கிறதா என்று விசாரித்து பாருங்கள். அப்படி இருக்க சாத்தியமே இல்லை.
அதே போல சிவன் சார்ந்த குலதெய்வம் என்றால் எது என்று தெரிய வேண்டும் சிவ ரூபமே சுமார் இருவது ரூபங்கள் உள்ளன அதில் பல தெய்வங்கள் இருக்கும் அதில் எது ஒருவரின் குலதெய்வம் என்பது தெளிவாக தெரிய வேண்டும்.
வம்ச கள பிரசன்னத்தின் மூலம் குல தெய்வத்தை .
கண்டுபிடிக்கும் இந்த அற்புத கலையை எனக்கு கற்று தந்தவர் அஷ்டமங்கல பிரசன்ன கலையில் பல வித்யார்த்திகளை உருவாக்கிய அதியங்க பக்த சேவாஸ்ரமத்தின் பிதாமகர் பிரம்மஸ்ரீ அனந்தபத்மனாப பணிக்கர் அவர்கள்.
வம்ச கள பிரசன்னத்தில் குலதெய்வம் கண்டு பிடிக்க வருபவர்கள் முதலில் இந்த ஜென்மத்தில் அவர்களுக்கு குலதெய்வத்தை கண்டு பிடிப்பதற்கான யோகமும் விதியும் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு குறைந்தபட்சம் மூன்று தலைமுறை ஆண்களின் பெயர் பிறந்த ஊர் இவற்றைக்கொண்டு பிரசன்னம் பார்த்து குலதெய்வத்தை கண்டுபிடிக்கும் யோகமும் விதியும் இருக்கிறது. விடுபட்ட குலதெய்வ வழிபாட்டை துவங்க காலம் வந்துவிட்டது என்பதை தெரிந்து கொண்டுஅஷ்டமி,நவமி, அமாவசைக்கு அடுத்த பிரதமை மற்றும் சனிக்கிழமைகளை தவிர்த்து பிரசன்னம் பார்க்க வேண்டும்.
பெரும்பாலும் உச்சிவேளை பனிரெண்டு மணிக்கு முன்பாக வருவது நல்லது.
அதேபோல குலதெய்வம் கண்டுபிடிக்க பிரசன்னம் கேட்கப்போகிறவர்கள் கண்டிப்பாக அந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டுமே போக வேண்டும்.
வம்சகள பிரசன்னம் பார்க்க போகும் போது தாம்பூல பிரசன்னம் பார்க்க பிரசன்னம் கேட்கிறவர்கள் அவர்களுக்கு தோன்றும் அளவிற்கு வெற்றிலை பாக்கு மற்றும் மஞ்சள் கிழங்கு ஆகியவற்றை வாங்கி வர வேண்டும். இது அவர்கள் வரும்போது இருக்கும் சகுனம் மற்றும் உடன் வருவர்களின் கூட்டுபலன் ஆகியவற்றை ஆரூடம் மூலம் கண்டுபிடிக்க உதவும். அவ்வாறு சகுன தடை ஏதேனும் ஏற்பட்டிருந்தால் அவர்களை அருகில் உள்ள விநாயகர் கோவிலில் கற்பூரம் ஏற்றி விட்டு வர சொல்வது வழக்கம்
குல தெய்வம் கேட்க வருபவரிடம் ஒரு வெள்ளை தாளில் அடுத்தடுத்து கட்டங்கள் வரைய சொல்லப்படும் அந்த கட்டங்களின் எண்ணிக்கை மூன்று தலைமுறைகளின் பெயர் முதல் எழுத்தை அடிப்படையாக கொண்டது. இது படிநிலை எணப்படும்.
குலதெய்வம் பார்க்க பிரசன்னம் கேட்பவரின் குடும்பத்தில் தற்போது உயிரோடு இருக்கும் மூத்த ஆண் உறுப்பினரின் பெயரையும் மிகவும் இளைய ஆண் உறுப்பினரின் பெயரும் எடுக்க வேண்டும். இவர்களின் பெயருக்கு பூர்வ களம் அமைத்து சோழி பிரசன்னத்தில் பதிணெட்டு சோழிகளை முத்திர தீர்வையாக போட வேண்டும் அதில் குல தெய்வம் அமைந்திருக்கும் இடத்திற்கு மூலகல் எது என்று அறிந்து கொள்ளலாம்.
மூலகல் என்பது குல தெய்வம் கேட்க வந்தவரின் முன்னோர்கள் இருந்த இடம் அல்லது பூர்வீக இடமாகும். சோழிகளை கலைத்து பிரானபந்த தீர்வையாக போட்டால் குல தெய்வம் அமைந்திருக்கும் இடம் மூலக்கலிற்கு எந்த திசையில் எத்தனையாவது கிலோமீட்டரில் அமைந்துள்ளது என்று அறிந்து கொள்ளலாம்.
அடுத்து தேவதா பிரமாணம் எனப்படும் இஷ்ட தெய்வத்தின் உத்திரவு வாங்கிய பின் படிநிலை கட்டங்களை வரைய செய்து விவர்த்த சோழி பிரயோக முறைபடி சோழிகளை போட.
குல தெய்வத்தின் பெயருக்கான எழுத்துக்கள் ஒவ்வொன்றாக தெரியவரும். அதாவது வரையப்பட்ட பதினொரு கட்டங்களில் ஒவ்வொரு கட்டத்திலும் எழுத வேண்டிய எழுத்துக்கள் தெரிய வரும் இதன்படி குலதெய்வத்தின் பெயர் பச்சை நாயகி என்றால்என்றால் ஒவ்வொரு எழுத்தாக ப ச் சை நா ய கி என்று தெளிவாக தெரிய வரும். இந்த முறையில் அதிகம் வழக்கத்தில் இல்லாத குல தெய்வ பெயர்களை கூட கண்டு பிடித்திருக்கிறேன்.
உதாரணமாக குலதெய்வம் கருப்பு என்கிற கருப்பண்ணசாமியாக வந்தால் பொதுவாக கருப்பு என்று சொல்லாமல் நொண்டி கருப்பு...பிலவாடி கருப்பு, சங்கிலி கருப்பு என்று குறிப்பிட்டு பெயரை சொல்ல முடியும்.
அடுத்து இதே முறையில் ஊர்த்துவ பிரயோக முறைபடி சோழிகளை போட குல தெய்வம் அமைந்திருக்கும் ஊரின் பெயர் ஒவ்வொரு எழுத்தாக அறிந்து கொள்ளலாம். ஊரின் பெயர் சோலையூர் என்று இருந்தால் கண்டிப்பாக சோ லை யூ ர் என்று ஒவ்வொரு எழுத்தாக சோழி உணர்த்தும்.
அடுத்து பிரசன்ன களத்தின் 18 சோழிகளில் எந்த சோழி எங்கு இருக்கிறது, எந்த திசை நோக்கி பார்க்கிறது. எந்தெந்த சோழியை இனைந்த இருக்கிறது. என்பதை வைத்து குல தெய்வ கோவிலின் அருகில் நீர்நிலை இருக்கிறதா. சாலை இருக்கிறதா மலை இருக்கிறதா என்று அறியலாம்.
அம்ச சோழிகளின் எண்ணிக்கை வைத்து தெரிந்து கொண்டு பிரசன்னம் கேட்க்க வருபவர் பிறந்த இடம் அல்லது தற்போது வசிக்கும் இடத்திற்கு எந்த திசையில் குல தெய்வ கோவில் அமைந்திருக்கிறது என்பதை மிக சரியாக சொல்ல முடியும். அதிலும் வடக்கு தெற்கு கிழக்கு மேற்க்கு என்று இல்லாமல் வடக்கு சார்ந்த வடமேற்கு அல்லது மேற்கு சார்ந்த வடமேற்கு என்று குறிப்பிட்டு சொல்ல முடியும்.
அதே போல சோழிகள் அமைந்திருக்கும் விதான வளையத்தை கொண்டு பிரசன்னம் கேட்கின்றவர் தற்போது குடியிருக்கும் இடத்தில் இருந்து அல்லது பிறந்த இடத்தில் இருந்து எவ்வளவு கல் தொலைவில் குலதெய்வ கோவில் இருக்கிறது என்பதையும் மிக சரியாக குறிபிட்டு சொல்ல முடியும். தற்போது கல் கணக்கு வழக்கத்தில் இல்லாததால் கல்தொலைவை கிலோ மீட்டராக மாற்றி சொல்லுகின்றோம். இதில் சுமாரா ஐம்பதில் இருந்து அறுபது கிலோமீட்டருக்குள் என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது.
குல தெய்வ கோவிலை பிரசன்னம் மூலம் கண்டுபிடித்து விட்டால் கண்டுபிடித்த நாளில் இருந்து எழுபத்தி இரண்டு நாட்களுக்குள் கண்டுபிடித்த கோவிலுக்கு போக வேண்டும். ஓவிலுக்கு போய்விட்டு வந்த மூன்று நாட்களுக்குள் நடக்கும் சகுனங்களை வைத்து சரியான கோவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக வயல் அருகில் இருக்கும் ஊர் தண்ணீர் அருகில் இருக்கும் ஊர் என்று சொல்வதில்லை மிக தெளிவாக ஊரின் பெயரையும் குல தெய்வத்தின் பெயரையும் சொல்வதே வம்சகள பிரசன்னம்.
இந்த முறையில் மட்டுமே குலதெய்வத்தின் நைவேத்தியம் என்னவென்றும் வஸ்திரம் என்னவென்றும் குலதெய்வத்திற்கான வழிபாட்டு நாள் என்னவென்றும் தெளிவாக தெரிந்துகொள்ள முடியும்.
தொடர்புக்கு
பிரம்ம ஸ்ரீ. Dr. G. முகுந்தன்
அலைபேசி. 8667879411...8098409001
We dont know our kulatheivam. Can you help me to find our kulatheivam. T.Ravindran
ReplyDeleteOur kuladeivam help me
ReplyDelete