பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் நின்ற ராசியில் இருந்து ஆறாம் இடத்தில் புதன் சந்திரன் அல்லது சூரியனால் பார்க்கப்பட்டு லக்கினம் பாப கிரகங்களால் பார்க்கப்பட்டால் குல தெய்வ தோஷம் உள்ளது என்பது ஜோதிடம். மேலும் சனி பகவான் வீடான மகரம் அல்லது கும்பத்தில் சூரியன் இருந்து செவ்வாயின் பார்வை இருந்தாலும் குல தெய்வ சாபம் அல்லது தோஷம் உள்ளது என்றும் சொல்லப்படும்.
குல தெய்வ தோஷமும் சாபமும் இரண்டும் ஒன்றல்ல இரண்டும் வேறு வேறு காரணங்களால் ஏற்படுவது.
காரணங்கள் . . . . .
குல தெய்வ தோஷம் என்பது குல தெய்வ வழிபாட்டை தவற விடுவது அல்லது செய்யாமல் இருப்பதால் ஏற்படுவது. ஆரம்பத்தில் குலதெய்வ வழிபாட்டை செய்து கொண்டிருந்தவர்கள் ஏதோ ஒரு சூழ்நிலையால் பல வருடங்களாகவோ அல்லது சில தலைமுறைகளாகவோ பின்பற்றாமல் விட்டு விடுவதாலும்...அல்லது குல தெய்வம் எது என்று தெரியாமல் குல தெய்வ வழிபாடுகளையே பல காலமாக செய்யாமல் இருப்பவர்களுக்கும்....தவறான வழிகாட்டுதல்களால் தங்களுக்குறிய குலதெய்வத்தை வனங்காமல் வேறு தெய்வத்தை வணகிக்கொண்டிருப்பது ஆகிய காரணங்களால் ஏற்படுவது குலதெய்வ தோஷம்.
இது பெரும்பாலும் கவன குறைவு அல்லது வாழ்வியல் தவறுகளால் ஏற்படுவது.
குலதெய்வங்களில் துடியான தெய்வங்கள்...இணை தெய்வங்கள்...மூல தெய்வங்கள்.... என்று மூன்று நிலைகள் உள்ளன.
துடியான தெய்வங்கள் என்பது கொஞ்சம் உக்கிரமான தெய்வமாக துடிப்பான தெய்வமாக இருக்கும் பெரும்பாலும் உயிர்பலி பூஜையை ஏற்கும் தெய்வமாக இருக்கும். குல தெய்வ கோவில்களில் மற்ற பரிவார தெய்வங்களோடு இல்லாமல் தனி சன்னதியாக இருக்கும். ஆள் அரவமற்ற இடங்கள் ஒதுக்குப்புறமான இடங்கள் ஆகிய இடங்களில் வழிபாட்டு தலங்கள் அமைந்திருக்கும். இத்தகைய தெய்வங்களுக்கு ஒரு வருடம் கூட வழிபாடுகளை தவறவிட கூடாது.
இணை தெய்வங்கள் பெரும்பாலும் கொஞ்சம் சாந்தமாக இருக்கும் உண்மையில் குலதெய்வத்தின் பெயர் அமைப்பு வேறாக இருந்தாலும் வேறு தெய்வத்தோடு ஒப்பிட்டு வழிபடும் வழக்கம் இருக்கும். முனீஸ்வரரை சிவன் என்றும்...கருப்பராயரை பெருமாள் என்றும் ஆறுநாச்சியை அங்காளம்மன் என்றும் வணங்குவது போல. இத்தகைய தெய்வ வழிபாடுகள் மூன்று வருடம் வரை வழிபாடுகள் தவறினால் கூட பதிப்பு அதிகம் தராது. மூல தெய்வம் என்பது அந்த குலத்திற்கே அந்த தெய்வம் தான் முக்கியமான தெய்வமாக இருக்கும் அந்த தெய்வங்கள் பெரும்பாலும் அந்த குலத்திற்கு பெரிய அளவில் கெடுதலை உடணடியாக செய்துவிடாது. மூலதெய்வம் என்பது ஜாதிக்குரிய தெய்வமாகவோ இனத்திற்குறிய தெய்வமாகவோ இருக்காது. ஊர் தெய்வமாகவோ. ஒருகுறிப்பிட்ட பகுதியில் இருக்கும் ஊரில் குடியிருந்த ஒட்டுமொத்த மக்களுக்கானதாகவோ இருக்கும்.. இத தெய்வ வழிபாடுகள் ஏழு வருடமாக செய்யாமல் இருந்தால் குல தெய்வ தோஷம் ஏற்படும்.
அடுத்தது குல தெய்வ சாபம் என்பது குல தெய்வ வழிபாட்டில் தெரிந்தே அல்லது அலட்சியத்தால் தவறுகள் செய்வது.
முதலில் குலதெய்வ கோவில் அல்லது இருப்பிடம் ஆகியவற்றை அசுத்தப்படுத்துவது அல்லது அழிப்பது. குலதெய்வ கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் அல்லது பணம் ஆகியவற்றை சொந்த உபயோகத்திற்காக எடுத்துக்கொள்வது. குல தெய்வ கோவிலுக்கு செய்வதாக ஒப்புக்கொண்ட கட்டளைகளை செய்யாமல் இருப்பது..குல தெய்வ கோவிலின் வழிபாடுகளை நிறுத்தவோ தடை படவோ காரணமாக இருப்பது. மிகமிக முக்கியமாக தவறான பூஜைகளை செய்வது. சுத்த பூஜை ஏற்கும் தெய்வங்களுக்கு ஆடு கோழி போன்ற உயிரினங்களை பலிடுவது. நாள் தவறி கொடைநாளுக்கு எதிர்நாளில் வழிபாடுகள் செய்வது போன்றவற்றால் குல தெய்வ சாபம் ஏற்படும்.
குலதெய்வ தோஷம் என்பது குலதெய்வம் தெரியாதவர்கள் அப்பது குலதெய்வ வழிபாடுகளை செய்யாதவர்களுக்கு ஏற்படுவது ஆனால் குலதெய்வ தோஷம் என்பது குலதெய்வம் தெரிந்தவர்கள் அல்லது குலதெய்வ வழிபாடுகளை செய்து கொண்டிருப்பவர்களுக்கு கூட ஏற்படும்.
பாதிப்புகள். . . . .
குல தெய்வ தோஷதினால் பெரும்பாலும் முன்னேற்ற தடை இருக்கும். பொருளாதார நிலையிலும் அந்தஸ்திலும் பெரிய முன்னேற்றம் இருக்காது. அடிக்கடி சரிவுகளை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை இருக்காது. வாய்ப்புகள் கண்ணுக்கு தெரியும் ஆனால் அவற்றால் லாபமோ வருமானமோ இருக்காது. சுப காரியங்கள் நிறைவேறுவதில் தடையும் தாமதமும் ஏற்படும்.
குலதெய்வ சாபத்தினால் ஏற்படும் பாதிப்புகள் பெரிய அளவில் இருக்கும். பெரும்பாலும் வரிசு இல்லாமல் போவது புத்திர பாக்கியம் இல்லாமல் போவது ஆகியவை குலதெய்வ சாபத்தினால் ஏற்படுவது. குலதெய்வ சாபம் இருக்கும் குடும்பத்தில் அகால மரணங்கள் மற்றும் துர் மரணங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு தீர்க்க முடியாத அல்லது நாள்பட்ட நோய்பாதிப்புகள் இருக்கும். குல தெய்வ சாபம் இருக்கும் குடும்பங்களில் ஆண்களுக்கு திருமணம் ஆகாமல் இருக்கும். திடீர் பொருளாதார சரிவு ஏற்பட்டு அரசனும் ஆண்டியாகும் நிலை ஏற்படும். சிலருக்கு பிறவி தரித்திரம் எனப்படும் தொடர் வறுமை அல்லது பொருளாதார பற்றாக்குறை ஏற்படும்.
கடுமையான குல தெய்வ தோஷம் இருந்தால் குறிப்பிட்ட தலைமுறையோடு அந்த வம்சம் முடிவுக்கு வரும் அல்லது அற்று போகும்.
மூன்றவதாக குல தெய்வ கட்டு என்பது.... எந்த தெய்வத்தையும் யாராலும் கட்டமுடியாது தெய்வங்களை கட்டும் அளவிற்கு யாரும் பிறக்கவில்லை. குலதெய்வ கட்டு என்பது குலதெய்வத்தின் அருள் .. அல்லது சக்தி கிடைக்காமல் தடை செய்வதாகும்.
இது தேககட்டு.. ஸ்மரண கட்டு.. ஸ்தூல கட்டு.. வணிசைகட்டு எனப்படும். தேக கட்டு என்பது குல தெய்வம் தரும் பாதுகாப்பை தடுப்பது. இதனால் உடல் பாதிப்புகள் ஏற்படும் குறிப்பாக செய்வினை.. இடுமருந்து... ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்காது. தேக கட்டு பெரும்பாலும் அதே குலத்தை சார்ந்தவர்கள் அல்லது உறவினர்களால் ஏற்படுத்தப்படுவது.
அடுத்தது ஸ்மரணகட்டு என்பது எப்போது குல தெய்வத்தை பற்றி பேசினாலும்... குலதெய்வத்தின் பெயரை உச்சரித்தாலும் அல்லது குலதெய்வ கோவிலுக்கோ அமைந்திருக்கும் ஊருக்கோ போனால் தொடர்ந்து எதிர்மறை விளைவுகள் அல்லது எதிர்மறை நிகழ்வுகள் ஏற்படும். மேற்கண்ட இரண்டும் தற்காலிகமானது இவற்றை நீக்குவதும் சுலபம். அதே போல இவை இரண்டும் குறிப்பிட்ட தனி மனிதர்களை மட்டும் பாதிப்பது.
ஆனால் ஸ்தூல கட்டு என்பது பல தலைமுறைகளுக்கு தொடர்வது யாரை குறிவைத்து செய்கிறார்களோ அவரின் குடும்பத்தினர் அனைவரையும் பாதிக்க கூடியது. இது தேவதா ஸ்தம்பனத்தின் மூலம் செய்யப்படுவது.
கடைசியாக வணிசை கட்டு என்பது ஒட்டு மொத்த குலத்தின் ஒட்டுதலும் இல்லாமல் செய்வது. பல இடங்களில் குலதெய்வ கோவில்கள் பல வருடங்களாக பாழடைந்து இருக்கும். அல்லது ஏதாவது பிரச்சனை காரணமாக வழிபாடுகள் இல்லாமல் பூட்டப்பட்டிருக்கும். இதெல்லாம் வணிசை கட்டால் ஏற்படுவது. வணிசை கட்டு பலதலைமுறைகளுக்கு தீர்க்க முடியாமல் தொடர்வது. பெரும்பாலும் எதிர்நிலை தெய்வங்களை கொண்டு செய்வது.
வம்சகள ப்ரசன்னம் . . . . . .
ஒருவருக்கு ஏற்பட்டிருப்பது குலதெய்வ தோஷமா குலதெய்வ சாபமா அல்லது குல தெய்வ கட்டு இருக்கிறதா என்று கண்டு பிடிப்பதில் காலம்காலமாக மிக சிறந்த வழியாக வம்சகள பிரசன்னம் திகழ்கிறது.
வம்சகள பிரசன்னம் மூலம் ஏற்பட்டிருப்பது குலதெய்வ தோஷமா... சாபமா... அல்லது குல தெய்வ கட்டா என்று அறிந்து அதற்குறிய நிவர்த்திகளை செய்யவேண்டும்.
குலதெய்வம் தெரிந்து கொள்ளவும்..... வம்ச கள பிரசன்னம் பார்க்கவும் .. . ... தொடர்புகொள்ளவும்,,
Comments
Post a Comment