குல தெய்வ வழிபாடு ஆண் தெய்வ வழிபாடு பெண்தெய்வ வழிபாடு என்ற இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
ஆண் தெய்வ வழிபாடு தனிதெய்வம் மற்றும் துணை தெய்வம் என்ற வகைபடுத்தப்படும். இதில் தனி தெய்வம் என்பது மூலதெய்வம் என்றும் சொல்லப்படும். பெண் தெய்வங்கள் தாய் தெய்வம் மற்றும் கன்னி தெய்வம் என்று வகைபடுத்தப்படும்.
கருப்பு..ஐயனார்..முனி.. மாடன்.. சாஸ்தா.. ராயன்...வீரன்....முனீஸ்வரன்...கழுவுடையார்...காத்தவராயன்... துடும்பன்.. பெரியாண்டவர்..இப்படி பல ஆண் தெய்வங்கள் உள்ளன ஒவ்வொன்றிலும் ஏராளமான உட்பிரிவுகள் உள்ளது.
பெண் தெய்வங்களில் பொது பெயர்கள் இல்லாமல் பல நூறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
இதில் ஆண் தெய்வங்களில் துணை தெய்வங்களும் பெண் தெய்வங்களில் கன்னி தெய்வங்களும் உக்கிரமானதாகவும் தண்டிக்கக் கூடியதாகவும் இருக்கும். இந்த தெய்வ வழிபாடுகளில் குறை இருந்தாலோ விடுபட்டிருந்தாலோ அவை தோஷங்களாகவும் சாபங்களாகவும் மாறும். இதனால் இதகைய குல தெய்வங்களை குல தெய்வங்களாக கொண்டவர்கள் குல தெய்வ வழிபாட்டினை தவறவிடும் போது அதனால் பிரச்சனைகளும் சிக்கல்களும் ஏற்படுகிறது.
தனி தெய்வம் அல்லது வழிபாடு தெய்வம் எனப்படும் ஆண் தெய்வங்கள் பெரும்பாலும் காவல் தெய்வங்களாக இருக்கும்.அய்யனார்... சாஸ்தா... கருப்பராயர் போன்ற தெய்வங்கள் இந்த பிரிவில் அடங்கும். அதே போல
தாய் தெய்வங்கள் எனப்படும் பெண் தெய்வங்கள் சாந்தமாக இருக்கும். காளிகாம்பாள்...ரேனுகாம்பாள்...பேச்சியம்மன்..பச்சைவாழியம்மன் போன்றவை தாய் தெய்வங்கள் எனப்படும். துணை தெய்வங்களும் கன்னி தெய்வங்களும் சிறு தெய்வங்கள் என்ற வகையில் பல இடங்களில் பரவி இருக்கின்றன.
தனிதெய்வங்கள் என்ற பிரிவில் பதினாறு ஆண் தெய்வங்களும் தாய் தெய்வங்கள் என்ற பிரிவில் பதினெட்டு பெண் தெய்வங்களும் அடங்கும்.
குல தெய்வ வழிபாடு என்பது தமிழ் மரபின் மிக மிக அவசியமான தவிர்க்க முடியாத வழிபாட்டு முறையாகும். பெரு தெய்வ வழிபாடு அல்லது வைதீக வழிபாடு எனப்படும் சிவன் விஷ்னு பார்வதி விநாயகர் முருகன் போன்ற கடவுள் வழிபாட்டை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட குல தெய்வ வழிபாட்டை தவறாமல் பின்பற்றுகின்றனர்.
தமிழ்மண்ணில் வைதீக மதங்கள் தோன்றி வளர்வதற்கு முன்பிருந்தே சிறுதெய்வ வழிபாடு எனப்படும் குல தெய்வ வழிபாடுகள் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றன.
நாட்டார் தெய்வம்..சிறு தெய்வம்...ஊர் தெய்வம்..வீட்டு சாமி என்றெல்லாம் குறிப்பிடப்படும் குல தெய்வ வழிபாடு தவிர்க்க முடியாத கடமையாகும். குல தெய்வ அனுக்கிரகம் இல்லையேல் வேறு எந்த தெய்வ அனுக்கிரகமும் இல்லை என்பது முதுமொழி.
குலதெய்வத்தை கண்டுபிடிப்பதில் சில முக்கிய நிபந்தனைகள் உள்ளன. முதலில் குலதெய்வம் சிறு தெய்வ வழிபாடு அல்லது நாட்டார் வழிபாடு என்ற பிரிவில் அடங்குவது இது சைவ வைணவ வைசேஷிக ஆகம விதிகளுக்கு உட்படாதது.
இரண்டாவது சைவம்,வைணவம். ஆகிய வழிபாட்டு பிரிவுகளுக்கும் குலதெய்வ வழிபாட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவே குலதெய்வங்கள் சைவ வழிபாடிற்கு உரிய தெய்வங்களாகவோ வைணவ வழிபாட்டிற்கு உரிய தெய்வங்களாகவோ கண்டிப்பாக இருக்காது.
ஒவ்வொரு குல தெய்வத்திற்கும் தனிதனி வழிபாட்டு உரிமைகள் மரபுகள் உள்ளன. தமிழ்நாட்டிலுள்ள பல கிராம கோவில்களில் குலதெய்வ வழிபாட்டிற்கு பின் பற்றப்படும் வழிமுறைகள் சடங்குகள் ஆகியவற்றை உற்று நோக்கினால் இந்த உண்மை புலனாகும்.
பொதுவாக தமிழ் நாட்டு குலதெய்வ வழிபாடுகளில் அமைவிடத்திற்கு ஏற்ற சில ஒற்றுமைகள் உள்ளன. தொண்டை நாடு எனப்படும் வேலூர்,திருவண்ணாமலை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மற்றும் ஆந்திரமாநிலத்தின் நெல்லூர் சித்தூர் (மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு தமிழகத்தின் அங்கமாக இருந்த பகுதிகள்) ஆகிய பகுதிகளில் வழிபடப்படும் குல தெய்வ வழிபாடுகளில் ஒற்றுமைகள் உள்ளன. ஆனால் அந்த வழிபாட்டு முறைகள் கொங்கு மண்டலம் எனப்படும் கோயமுத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம் தருமபுரி பகுதியின் வழிபாட்டு முறைகளுடனும் அல்லது சோழ மண்டலம் எனப்படும் கரூர், திருச்சி,தஞ்சாவூர், நாகபட்டினம், திருவாரூர் ஆகிய பகுதிகளின் வழிப்பாட்டு முறைகளுடனும் ஒத்து போவதில்லை.
திருச்சி குளித்தலை பகுதியில் வணக்கப்படும் அங்காயிஅம்மன், பட்டாயி அம்மன் போன்ற தெய்வங்கள் மற்ற பகுதிகளில் பிரபலமில்லை. தென் தமிழ் நாடு மற்றும் நாஞ்சில் நாடு இணைந்த திருநெல்வேலி, தூத்துகுடி, நாகர் கோவில், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் மிக பிரபலமாக இருக்கும் சாஸ்தா சுடலை ஆகிய தெய்வங்களுக்கு தமிழகத்தின் மற்ற பகுதிகளில் அதிகம் கோவில்கள் இல்லை.
வழிபாட்டு முறைகளும் சடங்குகளும்தொண்டைநாடு.. நடு நாடு.... சோழநாடு.... கொங்கு நாடு.... பாண்டிய நாடு..... நாஞ்சில் நாடு என்ற பிரிவுகளின் அடிப்படையிலேயே ஒற்றுமை உள்ளது.
எனவே குலதெய்வ கோவில்கள் கண்டிப்பாக அந்த குடும்பத்தின் பூர்வீக இடத்தின் அருகிலோ அல்லது அதற்கு தொடர்புடைய இடத்திலோ தான் இருக்கும்.
சில இடங்களில் பூர்வீக இடத்தில் இருந்து மண் எடுத்து வந்தோ அல்லது உத்திரவு வாங்கியோ புதிதாக கோவில் கட்டி இருப்பார்கள்.
பூர்வீக இடத்தில் இருக்கும் கோவில் மூல கோவில் என்றும் வேறு இடங்களில் இருக்கும் கோவில்கள் இணை கோவில்கள் என்றும் அழைக்கப்படும்.
பூர்வீக இடத்தில் இருக்கும் கோவில் அல்லது இருப்பதிலேயே மிக பழமையான கோவில் தான் மூலக்கோவில் எனப்படும். மூலக்கோவிலில் வழிபடுவதே சரியான முறை.
சில குடும்பங்களுக்கு குல தெய்வம் தனியாகவும் காவல் தெய்வம் தனியாகவும் இருக்கும்.
குல தெய்வங்கள் வீட்டு தெய்வம்..குல தெய்வம்..இன தெய்வம்..ஊர் தெய்வம்..என்ற நான்கு பெரும் பிரிவுகளுக்குள் அடங்கும்.
குல தெய்வங்களில் வீட்டு தெய்வம் என்பது ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கு மட்டுமே உரியதாக இருக்கும். தங்கள் வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்தவர்கள் அல்லது செயற்கறிய செயல்களை செய்த முன்னோர்கள் அல்லது விபத்தில் இறந்த கன்னி பெண்கள் இவர்களை வணங்குவதாகும். இதை இல்லுறை தெய்வம் என்று சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறது. பொதுவாக ஒரு குடும்பத்தின் நன்மைக்காக அல்லது அந்த குடும்பத்தை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக அல்லது அந்த குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக உயிர் தியாகம் செய்தவரை அந்த குடும்பம் நினைவில் வைத்து வணக்குவதும். எதிர்பாராதவிதமாக அகாலமாக இறந்து போனவர்களால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் வந்துவிட கூடாது என்ற பயத்தின் காரணமாகவோ.. வீட்டு தெய்வம் எனப்படும். பெரும்பாலும் ஒரு குடும்பத்தின் அனைத்து பங்காளிகளுக்கு மட்டும் உரிய தெய்வமாக இருக்கும்.
குல தெய்வம் என்பது ஒரு குலத்தின் அல்லது ஜாதியின் உட்பிரிவை சார்ந்தவர்களின் நன்மைக்காக அல்லது அந்த குலத்தை ஆபத்தில் இருந்து காப்பாறுவதற்காக உயிர் தியாகம் செய்தவரோ அல்லது அந்த குலத்தை வழி நடத்த தன் வாழ்க்கையை தியாகம் செய்தவரையோ வனங்குவது குல தெய்வம் எனப்படும். இது ஒரு இனம் அல்லது ஒரு ஜாதி பிரிவிற்கு உரிய தெய்வமாக இருக்கும்.
இன தெய்வம் என்பது ஒரு குறிப்பிட்ட இனத்தில் இருக்கும் அனைத்து உட்பிரிவுகளை சேர்ந்தவர்களும் வணங்கும் தெய்வமாக இருக்கும். இனத்தின் மானம் காக்க அல்லது இனத்தின் நன்மைக்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைத்து வணங்குவதே இன தெய்வ வழிபாடு.
ஊர் தெய்வம் என்பது ஆபத்தில் இருந்த ஊரை உயிர் தியாகம் செய்து காப்பாற்றியது. அல்லது ஊருக்கு வரும் பழியையோ ஆபத்தையோ அவமானத்தையோ தான் தாங்கி உயிர்த்தியாகம் செய்தது. அல்லது ஊரின் மிக பெரிய நன்மைக்காக உயிர் தியாகம் செய்தது இப்படி ஊருக்காக ஏதாவது ஒரு வகையில் உயிர் தியாகம் செய்தவரை நன்றி கடனோடு நினைத்து அந்த ஊர்மக்கள் அனைவரும் வழி படுவது ஊர்தெய்வம் எனப்படும்.
ஊர் தெய்வங்களை பல இனத்தை சார்ந்தவர்கள் பல ஜாதியை சேர்ந்தவர்கள் வணங்கும் வழக்கம் இருக்கும்.
மொத்தத்தில் பொது நன்மைக்காக உயிர்தியாகம் செய்தவர்களை நினைத்து வணங்குவதே குல தெய்வ வழிபாடு என்று பல சரித்திர ஆன்மீக ஜோதிட ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
ஒருவருடைய குல தெய்வம் எந்த வகையை சார்ந்தது என்றும் அதற்கான வழிபாட்டு முறைகள் என்ன என்பதையும் அறிந்து அதற்குறிய வழிபாடுகளை பின்பற்ற வேண்டும்..
குல தெய்வ வழிபாடு என்பது ஒரு கடன். ஓவ்வொருவரும் தவறாமல் பின்பற்றவேண்டிய கட்டாயம். குல தெய்வ வழிப்பாட்டை தவறவிட்டால் நன்றி கடன் செலுத்த தவறியவர்களாகிவிடுவோம்.
குல தெய்வ வழிபாட்டை தவறவிட்டாலோ தவறான முறையில் பின்பற்றினாலோ அதனால் ஏற்படும் விளைவு குலதெய்வ தோஷம்...குல தெய்வ சாபம் என்று இரண்டு வகைகளில் உண்டு.
ஒரு குடும்பத்தின் வெற்றியும், ஆரோக்கியமும், நீண்ட ஆயுள் பலமும், குடும்ப ஒற்றுமையும் குலதெய்வத்தின் அனுக்கிரகத்தை பொருத்தது.
குல தெய்வவழிபாட்டை தவறவிட்டு அதனால் தோஷம் ஏற்பட்டிருந்தாலும் குலதெய்வ வழிபாடுகளில் தவறுகள் ஏற்பட்டதால் சாபம் ஏற்பட்டிருந்தாலும் குல தெய்வத்திற்கு கட்டு போடப்பட்டு செயலிழந்திருந்தாலும் குல தெய்வத்தின் அருளும் அனுகிரகமும் அந்த குடும்பத்திற்கு கிடைக்காமல் போய் விடும்.
அப்படி குல தெய்வ அனுக்கிரகம் இல்லை என்றால் முதலில் பாதிப்பது குடும்ப ஒற்றுமை. குடும்பம் நெல்லிக்காய் மூட்டையை போல சிதறிப்போகும்.
உடன்பிறந்தவர்களுக்குள் காரணமற்ற அல்லது வலுவான பகை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடையே உறவிற்கான உரிமையும் பாசமும் இல்லமல் இருக்கும். எதிர்பாராத தன நஷ்டம். ஏற்படும் மிக முக்கியமாக தொடர்ந்து பல வருடமாக் முன்னேற்றம் இல்லத சூழ்நிலை இருக்கும்.
குல தெய்வ அனுகிரஹம் இல்லை என்றால் அந்த குடும்பத்தின் ஆண்களுக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருக்கும். அடுத்தது குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு தீர்க்கமுடியாத அல்லது நாள்பட்ட நோய் இருக்கும்..குலதெய்வ சாபம் இருந்தால் அகால மரணங்கள் அல்லது துர்மரணங்கள் சம்பவிக்கும்.
பொதுவாக ஒரு குடும்பத்திற்கு குல தெய்வம் ஆண் தெய்வமாக இருந்து குல தெய்வ தோஷம் இருந்தால் இருந்தால் அந்த குடும்பத்தில் ஆண் வாரிசுகள் குறைவாக இருக்கும். ஆண்களுக்கு திருமணம் ஆவது தடைபடும் குடும்ப வாழ்வில் சிக்கல்களும் பிரச்சனைகளும் இருக்கும். அதுவே தோஷமாக இருந்தால் ஐந்து அல்லது ஏழு தலைமுறைகளுக்குள் அந்த வம்சம் அற்றுப்போகும். அதாவது அந்த வம்சத்தின் ஆண் வாரிசுகள் இல்லாமலோ அல்லது குழந்தைகள் இல்லாமலோ அந்த வம்சவிருத்தி நின்று போகும்.
ஒரு குடும்பத்தில் குல தெய்வம் பெண் தெய்வமாக இருந்து குல தெய்வ தோஷம் இருந்தால் அந்த குடும்பத்தில் சராசரிக்கும் அதிகமான பெண்களுக்கு திருமணம் ஆகாமல் இருக்கும். அல்லது இளம் வயதில் மண முறிவு கணவன் இறந்து போவது போன்ற நிகழ்வுகள் இருக்கும். கஷ்ட ஜீவனம், பிறவி தரித்திரம் எனப்படும் நீண்ட காலமாக பொருளாதார பிரச்சனைகள் ஆகிவற்றால் அந்த குடும்பத்து பெண்கள் துன்பப்படுவது போன்ற பாதிப்புகள் இருக்கும்.
ஒரு குடும்பத்தில் இருக்கும் மொத்த ஆண் அல்லது பெண்களின் எண்ணிக்கையில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பாதிப்புகளை வைத்து குல தெய்வம் ஆண் தெய்வமா அல்லது பெண் தெய்வமா என்பதை கணிக்க முடியும்.
பொதுவாகவே ஒருவருக்கு எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விருத்தியோஹம் இருக்கவேண்டும். அதாவது எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பொருளாதார நிலையிலும் அந்தஸ்திலும் முன்னேற்றம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் அந்த குடும்பத்திற்கு குல தெய்வத்தின் அருள் இல்லை என்று அர்த்தம்.
பொதுவாக குலதெய்வ வழிபாடு என்பது ஒரு கடன். விருப்பம் இருந்தாலும் இல்லை என்றாலும் கண்டிப்பாக குல தெய்வ வழிபாட்டினை செய்தேயாக வேண்டும். இன்றைக்கு தமிழ்நாட்டில் நாத்திகம் பேசும் பலரும் எல்லா தெய்வங்களையும் மிக மோசமாக பேசுகின்றனர். ஆனால் அவர்கள் அத்தனை பேரும் சிறு தெய்வ வழிபாடு என்ற பெயரில் தங்கள் குல தெய்வ வழிபாட்டை தவறாமல் பின்பற்றுகின்றனர்.
வைதீக தெய்வங்களை விமர்சிக்கும் பலரும் குல தெய்வங்களை விமர்சிப்பதில்லை.
மற்ற தெய்வ வழிபாடுகளை தவறவிட்டாலோ அல்லது வழிபடாமலே இருந்தாலோ எந்த பாதிப்பும் ஏற்படாது ஆனால் குல தெய்வத்தை வழிபடாவிட்டால் அதன் தக்கம் மிக விரைவில் தெரியும்.
ஆரம்பகாலத்தில் குல தெய்வ வழிபாடுகளை சரியாக செய்துகொண்டிருந்தவர்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக குல தெய்வ வழிபாட்டை செய்யாமல் போனால் அதனால்
குல தெய்வ தோஷம் ஏற்படு
.
குல தெய்வ வழிபாட்டில் துடி தெய்வங்கள் இணை தெய்வங்கள்...மூல தெய்வங்கள் என்று மூன்று வகைகள் உள்ளன.
துடி தெய்வங்கள் என்பது கொஞ்சம் உக்கிரமான தெய்வமாக துடிப்பான தெய்வமாக இருக்கும் பெரும்பாலும் உயிர்பலி பூஜையை ஏற்கும் தெய்வமாக இருக்கும். இத்தகைய தெய்வங்களுக்கு ஒரு வருடம் கூட வழிபாடுகளை தவறவிட கூடாது.
இணை தெய்வங்கள் பெரும்பாலும் கொஞ்சம் சாந்தமாக இருக்கும் உண்மையில் குலதெய்வத்தின் பெயர் அமைப்பு வேறாக இருந்தாலும் வேறு தெய்வத்தோடு ஒப்பிட்டு வழிபடும் வழக்கம் இருக்கும். முனீஸ்வரரை சிவன் என்றும்...கருப்பராயரையும் பெரியாண்டவரையும் பெருமாள் என்றும் ஆறுநாச்சியை அங்காளம்மன்.. பேச்சியம்மனை பார்வதி என்றும்...சா..ஸ்தாஅய்யனாரை ஐயப்பன் என்றும் வனங்குவது போல. இத்தகைய தெய்வ வழிபாடுகள் மூன்று முதல் வருடம் வரை வழிபாடுகள் தவறினால் கூட பதிப்பு அதிகம் தராது.
மூல தெய்வம் என்பது அந்த குலத்திற்கே அந்த தெய்வம் தான் முக்கியமான தெய்வமாக இருக்கும் அந்த தெய்வங்கள் பெரும்பாலும் அந்த குலத்திற்கு பெரிய அளவில் கெடுதலை உடண்டியாக செய்துவிடாது.
மூலதெய்வம் என்பது ஜாதிக்குரிய தெய்வமாகவோ இனத்திற்குறிய தெய்வமாகவோ இருக்காது. ஊர் தெய்வமாகவோ. ஒருகுறிப்பிட்ட பகுதியில் இருக்கும் ஊரில் குடியிருந்த ஒட்டுமொத்த மக்களுக்கானதாகவோ இருக்கும்.. பல இடங்களில் பல ஜாதி பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு ஒரே தெய்வம் இருப்பதை பார்த்திருக்க முடியும். இந்த தெய்வ வழிபாடுகள் எட்டு வருடமாக செய்யாமல் இருந்தால் அந்த குலதெய்வத்தில் அருள் அந்த குடும்பத்திற்கு கிடைக்காமல் போகும்.
அடுத்தது குல தெய்வ சாபம் என்பது.
குல தெய்வ வழிபாட்டில் பெரிய அளவிலான தவறுகள் செய்யும் போது குலதெய்வ சாபம் ஏற்படுகிறது.
முதலாலதாக குலதெய்வ கோவில்..விக்ரகம் அல்லது இருப்பிடம் ஆகியவற்றை அசுத்தப்படுத்துவது..சேதப்படுத்துவது அல்லது அழிப்பது. குலதெய்வ கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் அல்லது பணம் ஆகியவற்றை சொந்த உபயோகத்திற்காக எடுத்துக்கொள்வது. குல தெய்வ கோவிலுக்கு செய்வதாக ஒப்புக்கொண்ட கட்டளைகளை செய்யாமல் இருப்பது.. மிகமிக முக்கியமாக தவறான பூஜைகளை செய்வது. சுத்த பூஜை ஏற்கும் தெய்வங்களுக்கு ஆடு கோழி போன்ற உயிரினங்களை பலிடுவது. நாள் தவறி கொடைநாளுக்கு எதிர்நாளில் வழிபாடுகள் செய்வது .வழிபாடுகள் நின்று போவதற்கு காரணமாக இருப்பது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.
குடும்பத்தை சேர்ந்த ஒரு ஆண் குலதெய்வ சாபத்திற்குறிய செயல்களில் ஈடுபட்டால் சபிண்ட உறவுமுறைபடி தந்தையுடன் சேர்த்து ஐந்து தலைமுறைகளுக்கு அந்த சாபம் எதிர்மறை பலன்களை தரும் என்பது சாஸ்திர விதி.
மூன்றாவதாக குல தெய்வத்தின் அருள் குறிப்பிட்ட குடும்பத்திற்கு கிடைக்காமல் கட்டு போடப்படும். இதை குல தெய்வத்தை கட்டுவது என்று சொல்வதுண்டு. ஒரு தெய்வத்தை கட்டி அதன் சக்தியை கட்டுபடுத்தும் மனிதன் இதுவரை இந்த உலகத்தில் பிறக்கவில்லை. இனி பிறக்கப்போவதும் இல்லை. தெய்வங்களை மிஞ்சிய மனிதன் சாத்தியமே இல்லை. உண்மையில் குலதெய்வத்தை கட்டுவதல்ல குலதெய்வத்தின் அருள் கிடைக்காமல் தடுப்பதை தான் குலதெய்வத்தை கட்டுவது என்று சொல்லப்படுகிறது.
குல தெய்வ தோஷம் என்பது வழிபாடுகள் விட்டு போவது...கட்டளைகளை நிறைவேற்றாமல் இருப்பது...வழிபாட்டு முறைகளில் தவறுகள் செய்வது இவற்றால் ஏற்படுவது. குலதெய்வ தோஷம் ஒருவருக்கு ஏற்பட்டால் அது அவரின் வம்சத்திற்கோ அவரை சேர்ந்தவர்களுக்கோ எந்த பாதிப்பையும் தராது. அவரின் காலத்திற்கு பின் அந்த தோஷம் மறைந்து போகும்.
குல தெய்வ வழிபாட்டில் கொடை நாள் என்பது மிகமிக முக்கியமானதாகும். கொடை நாள் என்பது அந்த தெய்வத்திற்கு உகந்த நாள் மட்டுமல்ல பிரபஞ்சத்தின் இயக்க கோட்பாட்டின் படி அந்த குலம் அல்லது குடும்பத்தை சார்ந்தவர்களின் ஆழ்மன இயக்கத்தின் அதிர்வலைகளுக்கு ஏற்ற நாளாக இருக்கும்.அந்த நாளில் உறவினர்கள் சந்திப்பது அவர்களுக்குள் ஓற்றுமையை அதிகரிக்கும்.
தோஷம் என்பது குல தெய்வம் தெரியாதவர்களுக்கு ஏற்படுவது சாபமும் கட்டும் குலதெய்வம் தெரிந்தவர்களுக்கு கூட ஏற்படும்.
ஒருவருக்கு குலதெய்வ வழிபாட்டில் குறை ஏற்பட்டிருகிறது என்றால் அவருக்கு ஏற்பட்டிருப்பது தோஷமா சாபமா அல்லது கட்டு போடப்பட்டிருக்கிறதா என்பதை தெரிந்துகொண்டு. அதை நீக்க வேண்டும்
பொதுவாக கணித ஜோதிடத்தில் ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் நின்ற ராசியில் இருந்து ஆறாம் இடத்தில் புதன் சந்திரன் அல்லது சூரியனால் பார்க்கப்பட்டு லக்கினம் பாப கிரகங்களால் பார்க்கப்பட்டால் குல தெய்வ தோஷம் உள்ளது என்று சொல்வதுண்டு. மேலும் சனி பகவான் வீடான மகரம் அல்லது கும்பத்தில் சூரியன் இருந்து செவ்வாயின் பார்வை இருந்தாலும் குல தெய்வ சாபம் அல்லது தோஷம் உள்ளது என்றும் சொல்லப்படும். ஆனால் இது எந்த அளவிற்கு சரியானது என்று சொல்லமுடியாது. காரணம் குல தெய்வ தோஷம் அல்லது சாபம் இருந்தால் அது குடும்பத்தில் இருக்கும் எல்லா ஆண்களையும் பாதிக்கும் அப்படியானால் குடும்பத்தில் இருக்கும் எல்லா ஆண்களுக்கும் ஜாதகத்தில் குல தெய்வ தோஷத்திற்கான கிரக அமைப்பு இருக்க வேண்டும்.
குல தெய்வ தோஷத்தினால் பெரும்பாலும் முன்னேற்ற தடை இருக்கும். பொருளாதார நிலையிலும் அந்தஸ்திலும் பெரிய முன்னேற்றம் இருக்காது. அடிக்கடி சரிவுகளை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை இருக்காது. வாய்ப்புகள் கண்ணுக்கு தெரியும் ஆனால் அவற்றால் லாபமோ வருமானமோ இருக்காது. சுப காரியங்கள் நிறைவேறுவதில் தடையும் தாமதமும் ஏற்படும்.
குலதெய்வ சாபத்தினால் ஏற்படும் பாதிப்புகள் பெரிய அளவில் இருக்கும். பெரும்பாலும் வரிசு இல்லாமல் போவது புத்திர பாக்கியம் இல்லாமல் போவது ஆகியவை குலதெய்வ சாபத்தினால் ஏற்படுவது. குலதெய்வ சாபம் இருக்கும் குடும்பத்தில் அகால மரணங்கள் மற்றும் துர் மரணங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு தீர்க்க முடியாத அல்லது நாள்பட்ட நோய்பாதிப்புகள் இருக்கும். குல தெய்வ சாபம் இருக்கும் குடும்பங்களில் ஆண்களுக்கு திருமணம் ஆகாமல் இருக்கும். திடீர் பொருளாதார சரிவு ஏற்பட்டு அரசனும் ஆண்டியாகும் நிலை ஏற்படும். சிலருக்கு பிறவி தரித்திரம் எனப்படும் தொடர் வறுமை அல்லது பொருளாதார பற்றாக்குறை ஏற்படும்.
குலதெய்வ தோஷம் குலதெய்வ சாபம் இவற்றிற்குறிய வித்தியாசத்தை அறிய படிக்கவும். https://knowyourkuladeivam.blogspot.com/2020/09/blog-post_12.html
பிரசன்ன ஜோதிடத்தின் வம்சகள பிரசன்னம் என்ற முறையில் குல தெய்வத்தை கண்டுபிடிக்கும் போது குல தெய்வத்தின் பெயர்...இருப்பிடத்தின் பெயர்.....ஆலயம் அமைந்திருக்கும் ஊரின் பெயர் ஆகியவற்றை அட்சர சுத்தமாக சொல்ல முடியும்.
பொதுவாக குல தெய்வம் கண்டுபிடித்து சொல்பவர்கள் மறை குறிப்பாகவே குலதெய்வத்தை பற்றி சொல்வதுண்டு. உங்கள் பூர்வீக இடத்திற்கு வடக்கே இருக்கிறது ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது.....பெண் தெய்வம்.....கையில் கத்தியுடன் இருக்கிறது என்று பொதுவாக சொல்வதுண்டு.
ஆனால்.......
பிரசன்ன ஜோதிடத்தின் வம்சகள பிரசன்னம் என்ற முறையில் குல தெய்வத்தை கண்டுபிடிக்கும் போது குல தெய்வத்தின் பெயர்...இருப்பிடத்தின் பெயர்.....ஆலயம் அமைந்திருக்கும் ஊரின் பெயர் ஆகியவற்றை அட்சர சுத்தமாக சொல்ல முடியும்.
கடந்த பதினைந்து வருடமாக இப்படித்தான் நான் குலதெய்வம் கண்டு பிடித்து சொல்லி வருகிறேன்.........
வம்ச கள பிரசன்னத்தின் மூலம் குல தெய்வத்தை கண்டுபிடிக்கும் இந்த அற்புத கலையை எனக்கு கற்று தந்தவர் அஷ்டமங்கல பிரசன்ன கலையில் பல வித்யார்த்திகளை உருவாக்கிய அதியங்க பக்த சேவாஸ்ரமத்தின் பிதா மகர் பிரம்மஸ்ரீ அனந்தபத்மனாப பணிக்கர் அவர்கள்.
குலதெய்வம் கண்டுபிடிக்கும் முறை என்னென்ன விவரங்களை தெரிந்துகொள்ள முடியும் என்பதை அறிய படிக்கவும்....
https://knowyourkuladeivam.blogspot.com/2019/06/blog-post.html
இந்த முறையில் மட்டுமே குலதெய்வத்தின் நைவேத்தியம் என்னவென்றும் வஸ்திரம் என்னவென்றும் குலதெய்வத்திற்கான வழிபாட்டு நாள் என்னவென்றும் தெளிவாக தெரிந்துகொள்ள முடியும்.
குல தொய்வம் கண்டு பிடிப்பவர்கள் குல தெய்வத்தின் பெயரை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக குல தெய்வம் கருப்பசாமியாக இருந்தால் அது பிலவாடி கருப்பா...நொண்டி கருப்பா.... அல்லது சங்கிலி கருப்பா என்று வகைபடுத்தி தெரிந்து கொள்ள வேண்டும் அதுவே சரியான முறை.
காரணம் ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனிதனியான மரபும் பிண்ணனியும் உள்ளது. தனிதனியான வழிபாட்டு முறைகள் உள்ளன அவற்றை மாற்றிசெய்யும்போதே குல தெய்வ தோஷம் ஏற்படுகிறது.
குல தெய்வம் தெரியாதவர்கள் அதற்கு பதிலாக வேறு ஒரு தெய்வத்தை வணங்கலாம் என்பது மிகமிக தவறு. இது ஒருவரிடம் கடன் வாங்கி விட்டு இன்னொருவரிடம் கொடுப்பதை போன்றது. மேலும் வைதீக தெய்வங்களுக்கும் குல தெய்வங்களுக்கும் உள்ள மிக பெரிய வித்தியாசமே குலதெய்வ வழிபாடுகள் அந்தந்த குடும்பம் அல்லது குலத்தின் வாழ்க்கை முறையோடு (Life Style) ஒத்து போவதாக இருக்கும்.
அதிலும் குல தொய்வ வழிபாடு என்பது பூர்வீகத்தின் பாரம்பர்ய பழக்கம்...குடும்பத்தின் சம்பிரதாய பின்பற்றுதல்கள்...வழிவழியாக பின்பற்றப்படும் சடங்குகள்... சம்பிரதாயங்களோடு இணைந்தது.
குலதெய்வத்திற்கு பதிலாக வேறு தெய்வத்தை வணங்கும் போது இவை அனைத்தும் பொருந்தாமல் மாறிப்போகும்.
பல இடங்களில் குல தெய்வ வழிபாடு குறி வழிபாடாக பின்பற்றப்படுகிறது. குல தெய்வத்திற்கென்று உருவமோ.. விக்ரகமோ..திருமேனியோ இருக்காது. கத்தி..சங்கிலி..வாள்...மரம்...மேடை போன்ற குறிப்புகள் மட்டுமே இருக்கும் குல தெய்வ வழி பாட்டிலேயே மிக பலமான சக்தி வாய்ந்த வழிபாட்டு முறையாக இந்த குறிவழிபாட்டு முறைகள் இருக்கின்றன.
இத்தகைய குறி வழிபாட்டு முறைக்கு உட்பட்டவர்கள் கொடை நாளை தவற விட கூடாது. அதே போல வருடம் ஒரு முறையாவது குலதெய்வ கோவில் இருக்கும் இடத்திற்கு செல்லவேண்டும்.
குலதெய்வ வழி பாட்டை தவறவிட்டவர்கள் குல தெய்வத்தை கண்டு பிடித்தபின் மூன்று கொடை நாட்களை பின்பற்றி அதற்குறிய வழிபாடுகளை செய்த பின்னரே முழமையான பலன்களை பெற முடியும்.
குல தெய்வம் தெரியாதவர்களுக்கு அவர்களின் குல தெய்வத்தின் மூலமாகவே தெய்வத்தின் பெயர்...கோவில் அமைந்திருக்கும் இடம்...கோயில் தற்போது இருக்கும் நிலை..குலதெய்வத்திற்கான வழிபாட்டு முறைகள்...குல தெய்வத்திற்கான கொடை நாள் ஆகியவற்றை மிக தெளிவாக வம்ச கள பிரசன்னத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
ஆனால் எலலோராலும் குலதெய்வத்தை கண்டுபிடித்துவிட முடியாது. பல தலைமுறைகளாக கண்டுபிடிக்க முடியாத குல தெய்வத்தை ஒருவருக்கு விதியும் கொடுப்பினையும் யோகமும் இருந்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
குல தெய்வத்தை கண்டு பிடிக்கும் வாய்ப்பிருந்து கண்டுபிடிக்காமல் ஏதோ ஒரு காரணத்தினால் தவறவிடுவது சந்ததிகளுக்கு பெரிய அளவிலான பிரச்சனைகள் ஏற்படுவதற்காக அறிகுறியாக கருதப்படுகிறது.
குல தெய்வம் தெரியாதவர்கள் குல தெய்வம் என்ன என்று கண்டுபிடிக்கவும்.... குல தெய்வத்தின் கோவில் எங்கே இருக்கிறது என்று தெரியாதவர்கள் குலதெய்வ கோவில் இருக்குமிடத்தை தெரிந்து கொள்ளவும் வம்சகள பிரசன்னம் எப்படி பயன்படுகிறதோ அதே போல குல தெய்வம் தெரிந்தவர்கள் அவர்கள் பின்பற்றும் வழிபாட்டு முறைகள் சரியானதுதானா....குல தெய்வத்தின் அருள் பூரணமாக அவர்களுக்கு இருக்கிறதா..குல தெய்வதின் சாபமோ..தடையோ இருக்கிறதா என்பதையும் வம்ச கள பிரசன்னம் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
வம்ச கள பிரசன்னம் என்பது பிரசன்ன சாஸ்திரத்தின் பிரிவுகளில் ஒன்று. வம்சம் என்பது பரம்பரை என்பதையும் களம் என்பது ராசி கட்டத்தையும் பிரஸ்னம் என்பது கேள்வி என்பதையும் குறிக்கும்.
சோழி பிரசன்னத்தின் மூலம் பார்க்கப்படும் இந்த முறையில் குல தெய்வத்தின் பெயரையும் குல தெய்வ கோவில் அமைந்திருக்கும் ஊரின் தற்ஓதைய பெயரையும். குல தெய்வத்திற்கான வழிபாட்டு முறைகளையும் மிக தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.
அது மட்டுமல்லாமல் பிரசன்னம் யாருக்கு பார்க்கப்படுகிறதோ அவர்கள் தற்போது வாழும் இடத்தில் இருந்து எந்த திசையில் எவ்வளவு தூரத்தில் குலதெய்வத்தின் கோவில் அமைந்திருக்கிறது என்பதையும் மிக தெளிவாக தெரிந்து கொள்ளமுடியும்.
வம்சகள பிரசன்னத்தின் மூலம் குல தெய்வம் தெரிந்து கொள்ள ஜாதகம் தேவையில்லை. பிறந்த தேதி தேவையில்லை. பிரசன்னம் கேட்பவர் அந்த குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவரின் பெயர் அவர் பிறந்த ஊர். பிரசன்னம் கேட்பவரின் தந்தையின் பெயர் அவர் பிறந்த ஊர். பிரசன்னம் கேட்பவரின் பாட்டனாரின் பெயர் இவை தெரிந்திருந்தால் போதும்.
சோழிபிரசன்னத்தின் அட்சர சாரங்களைக் கொண்டு பிரசன்னம் பார்ப்பவரின் தாய் மொழியில் ஒவ்வொரு எழுத்தாக தெரிந்துகொள்ள முடியும்.
Comments
Post a Comment